tamilnadu

img

முடி வெட்டிக்கொள்ள ஆதார் கட்டாயம்

சென்னை:
தமிழகம் முழுவதும் சலூன் கடைகளுக்கு செல்பவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டுச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சலூன்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள் ளது. அதன்படி, முடிவெட்ட, ஷேவ் செய்ய வருபவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளரது பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சலூன் கடைகள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.மேலங்கி, துண்டு என ஒரு நபருக்கு பயன்படுத்தும் பொருட்களை சலவை செய்த பிறகே மற்றவருக்கு பயன்படுத்த வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்து கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வருவாய் நிர்வாக ஆணையரும், சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார்.