சென்னை, மே 31- அம்பத்தூரில் குழந்தையின் கன்னத்தை வெறிநாய் கடித்துக் குதறிய சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. அம்பத்தூர் ஜீவன் பீமா நகர் பகுதியில் வசிப்பவர் தங்கபாண்டி. இவரது மனைவி பிரதீபா.
இவர் தனது 2.5 வயது குழந்தை யாஷிகாவுடன் வாசலில் நின்று கொண்டி ருந்தார். அப்போது தெரு நாய் ஒன்று, திடீரென குழந்தையை கடித்துள்ளது. நாயை விரட்ட முயன்ற பிரதீபாவையும் கடிக்க முயன்றுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத் தினர் வந்து நாயை விரட்டி, குழந்தையை மீட்டுள்ளனர். பிறகு படுகாயமடைந்த குழந்தைக்கு தனி யார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் சென்னை மாநகராட்சியில் புகார் அளித்துள் ளனர்.
சென்னை மாநகரப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்து வருகின்றன. வீடுகளில் வளர்க்கப் படும் நாய்களாலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. தினசரி தெரு நாய்கள் கடித்ததாக மாந கராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர், அவற்றுக்கு சென்னை மாநகராட்சியில் உரிமம் பெறுவது கட்டாயம் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படுகிறது. குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, அவற்றின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. மாநகராட்சியிடம் உரிமம் பெறாதவர் களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.