சிதம்பரத்தில் திசைகள் பதிப்பகம் சார்பில் லெனின் வாழ்க்கையில் சில ஏடுகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழா விற்கு சமூக சிந்தனையாளர் பேரவையின் தலைவர் ராகவேந்திரன் தலைமை தாங்கி னார். பேரவையின் செயலாளர் செல்வநாதன் வரவேற்றார். புத்தகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு நூலை வெளியிட்டு அறிமுக உரை ஆற்றினார். மக்கள் வாழ்வு ரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் சி.கலியமூர்த்தி புத்தகத்தை பெற்றுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளராக தமிழ் நாடு குடிமக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கி ணைப்பாளர் சி. மகேந்திரன் கலந்து கொண்டு லெனின் வாழ்க்கையில் சில ஏடுகள் புத்தகத்தின் குறித்தும் லெனின் மேற் கொண்ட சமூக பணிகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் சிபிஐ (எம்.எல்) மாநில செயலாளர் மா.குணாளன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணை பொது செயலாளர் பா.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் எஸ் ராஜா, புரட்சிகர சோசிய லிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பட்டு சாமி, மாவட்ட செயலாளர் ராஜாசங்கர். அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜி பழனி உள்ளிட்ட ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், ராதாகிருஷ்ணன், கலியமூர்த்தி, பிரேம் குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட னர். விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை 2-ம் ஆண்டு புள்ளியியல் பயிலும் மாணவி சௌமியாவுக்கு ரூ 5ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. திசைகள் பதிப்பாக பதிப்பாளர் அறவாழி அனைவருக்கும் நன்றி கூறினார்.