tamilnadu

img

ஆர்.நல்லகண்ணுவுக்கு 96-வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து...

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 96வது பிறந்த தினமான சனிக்கிழமையன்று (டிச.26) அவரை சந்தித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம்,தோழர் கே.டி.கே.தங்க மணியின் நினைவு தினம், ஆர்.நல்லகண்ணு 96வது பிறந்த நாள் என முப்பெரும் விழா சிபிஐ மாநிலக்குழு அலுவலகமான பாலன்இல்லத்தில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது.

சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டுதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக்குழுஉறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.ஆறுமுகநயினார், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர்
இந்நிகழ்வில் பேசியமு.க.ஸ்டாலின், “பொது வுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர். எளிமை, தியாகம், நேர்மை இவற்றின் இலக்கணமாக அரசியல் கடலின் கலங்கரை விளக்கமாக இருந்து ஒளியூட்டி வழிகாட்டும் பெருந்தோழர்” என்றார்.ஆர். நல்லகண்ணு பேசுகையில், “இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தொடக்க காலம்முதல் சுதந்திரம், அரசி யல் சாசனத்திற்காக போராடியது. சுதந்திரத் திற்கான லட்சியங்களுக்காக தொடர்ந்து போராடி வரு கிறது. தற்போது அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந் துள்ளது. அரசியல் சட்டம் நிலைக்குமா என்ற கேள்வி வந்துள்ளது. மனித உரிமை மறுக்கப்படுகிறது. போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது” என்றார்.

என்.சங்கரய்யா வாழ்த்து
தோழர் நல்ல கண்ணுவை தொலைபேசி யில் தொடர்பு கொண்டுவிடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்க ரய்யா, மதிமுக பொதுச் செய
லாளர் வைகோ உள்ளிட் டோர் வாழ்த்து தெரி வித்தனர்.