சென்னை:
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே தொடர்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரையிலான ஆறு மாத காலத்தில் வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களிலும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவே தொடரும் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.