சென்னை,பிப்.2 மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சென்னை வேளச்சேரி ஏ.ஜி.எம்.மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும மாணவர் ஆனந்த விக்கேஷ் 6 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப்பதக்கங்களை யும் 2 வென்கலப் பதக்கங்களையும் பெற்றார்.இதனால் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அவர் தகுதிபெற்றுள்ளார். மேலும் மாநில அளவிலான நீச்சல், ரோடு சைக்கிள் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கம், வெள்ளிப்பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். விளையாட்டுப்போட்டி களில் பதக்கம் வென்ற மாணவர்கள் சனிக்கிழமை ( பிப்.1) பள்ளியில் நடைபெற்ற 16வது ஆண்டுவிழாவில் பாராட்டப்பட்டனர். விழாவில் ராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமை செயலர் ஆர்.வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப்பேசினார்.பள்ளியின் தாளாளர் இராஜேந்திரன் வரவேற்றார். நிர்வாகி ஜெயஸ்ரீ இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் ஜெயகாந்தி ஆண்டறிக்கையை வாசித்தார்.பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் பாராட்டப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் ஆங்கில நாடகமான அலாவுதீன் நாடகம் மாணவர்களின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான அமைந்திருந்தது.பாவை நடனம், சிலப்பதிகார கண்ணகி நடனத்தையும் பார்த்த பெற்றோர்கள் மாணவர்களை பாராட்டினர்.