சென்னை
வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திமுக கட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் - மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இதனை மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் அறிக்கையோடு உறுதிப்படுத்தி, 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கயுள்ளதாக அறிவித்து உள்ளார். ஏற்கெனெவே திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.