tamilnadu

img

மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டி....

சென்னை:
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சனிக் கிழமையன்று கையெழுத்தானது. 

திமுக தலைமையிலான மதச்சார் பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய் யப்பட்டு வருகிறது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தங்கள் முடிந்தன.இந் நிலையில். மறுமலர்ச்சி திராவிட கழகத்துடன் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இருவரும் தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர். இதன்படி செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் மதிமுகவுக்கு 6 தொகுதிகளை பங்கீட்டுக்கொள்வது என்றும் இந்த தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய் யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டாலின், வைகோ இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த பேச்சுவார்த்தையின் போதுமதிமுக தரப்பில் மல்லை இ.சத்யா,ஏ.கே.மணி, புலவர் செவ்வந்தியப் பன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், அந்திரிதாஸ், சின்னப்பா ஆகியோரும் திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, க. பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.