election2021

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள்....

சென்னை:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான உடன்பாடு வியாழனன்று (மார்ச் 11) ஏற்பட்டது. திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற்ற உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.இதன்படி, திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல்,கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

இந்நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எஸ்.ஜெகத்ரட்சகன்எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன், “பேச்சுவார்த்தையில் வேறுசில தொகுதிகளை கேட்டோம். ஒரே தொகுதியை கூட்டணி கட்சிகளும் கேட்டுள்ளன. அதனால் சில கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து உடன்
பாட்டை முடிக்க வேண்டி இருந்ததால், விட்டுக்கொடுத்து இறுதியாக உகந்த 6 தொகுதியை ற்றுள்ளோம்” என்றார்.