தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, துணைத்தலைவர் ரோகிணி, பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜெ.ராஜசங்கீதன் ஆகியோர் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.