சென்னை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கடந்த மாதம் 19 ஆம் தேதியில் இருந்து கடந்த 25 நாட்களுக்குள் 5 லட்சத்து 28 ஆயிரத்து 985 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.இந்த கால கட்டத்தில் 3899 பேர் உயிரிழந்த
னர். ஒரே நாளில் 31,892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 15,31,377 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பரவலின் உச்சத்தில் இருந்த சென்னையில் கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை சரியத் தொடங்கி இருக்கிறது. சென்னையில் இதுவரை 4,25,603 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 44,313 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 2.4 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.