சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் கணிக்க முடியாத அளவிற்கு தினமும் மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராம பகுதியிலும் கொரோனா பரவல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரதத்தில் தமிழகத்தில் 4,329 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது(1.02 லட்சம்). மேலும் இன்று ஒரே நாளில் 64 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,385 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 2,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் நிலையில், கொரோனாவை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது
அதிகபட்சமாக சென்னையில் இன்று 2,082 பேர் புதிய நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 64 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் ஒரே நாளில் 332 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் தமிழகத்தின் 2-வது பெரிய நகரான மதுரையில் இன்று 287 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,423 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது.