tamilnadu

img

4.2 லட்சம் தடுப்பூசி டோஸ் சென்னை வந்தது....

சென்னை:
4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன. தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால் தமிழகத்தில் 3 ஆம் தேதி முதல் 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் மேலும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஜூன் 1 அன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசியானது மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.