tamilnadu

img

60 டன் எகிப்து வெங்காயம் சென்னை வந்தது

சென்னை:
எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தமிழகம் வந்தடைந்துள்ளதால், வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தை தொட்டு விற்பனை யாகி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், கப்பல் மூலம் குளிர்சாதன கண்டெய் னர்களில் அடைக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பை வந்தடைந்தது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் தற்போது தமிழகம் வந்தடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முதற்கட்டமாக 60 டன் அளவிலான எகிப்து வெங்காயம் திங்களன்று(டிச.9) வந்திறங்கியது. ஒரு வெங்காயமே 200 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்டதாக உள்ளது. இந்த வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேபோல் காலையில் திருச்சி வந்தடைந்த 30 டன் எகிப்து வெங்காயம், பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திருச்சியிலும் ஒரு கிலோ எகிப்து வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வழக்கமான நிறம் போல் அல்லாமல் சற்றே வித்தியாசமாக இருப்பதால் எகிப்து வெங்காயத்தை வாங்க சில்லறை வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.திண்டுக்கல் வெங்காயப் பேட்டைக்கு எகிப்து மற்றும் நைஜீரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 டன் அளவிலான வெங்காயம் வந்துள்ளது.