tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் கடந்த மார்ச் 21-ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இந்த பரிந்துரையின் மீது ஒன்றிய அரசு எந்த நடவடிக்கை எடுக்காமலிருந்த நிலையில், கடந்த மே 19-ஆம் தேதி இந்த 4 மாவட்ட நீதிபதிகளை, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கூடுதல் நீதிபதிகளாக ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது.