சென்னை, ஏப். 20-மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப் பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற் போக்குகூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் களை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே மாதம் முதல் தேதி பிரச்சாரம் தொடங்குகிறார். அதன்படி, மே 1 மற்றும் 2 ஆம் தேதி ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியிலும் 3, 4 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றத்திலும் 5, 6 ஆம் தேதிகளில் சூலூர் தொகுதியிலும் 7, 8 ஆம் தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும் முதல் கட்டமாக பிரச் சாரத்தை மேற்கொள்கிறார்.முன்னதாக, இந்த நான்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.4 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுவிட்டனர். தேர்தல் பொறுப் பாளர்கள் பட்டியலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட் டோர் கலந்துக் கொண்டனர்.