tamilnadu

img

பல்லாவரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 3 பேர் உயிரிழப்பு

சென்னை பல்லாவரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பல்லாவரம் கன்டோன்மண்ட் பகுதியில் நேற்றிரவு முத்துமாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடல்ன்-அலம் பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவேதி, வரலட்சுமி மற்றும் மோகனரங்கம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 19 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்த நிலையில், குடிநீரில் கழிவு நீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த குற்றச்சாட்டை அடுத்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன், காவல் துறை அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், பல்லாவரம் கன்டோன்மென்ட் அதிகாரிகள் உள்ளிட்டோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவ முகாம் அமைத்து பொது மக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.