tamilnadu

img

13 வகையான மளிகைப் பொருள்கள்... ஜூன் 3-ல் முதல்வர் வழங்குகிறார்....

சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 13 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை, மலிவு விலையில் வழங்க அரசு முடிவு செய் துள்ளது. இந்தத் திட்டமானது வரும் 3 ஆம் தேதி தொடங் கப்பட்டு, 5 ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அளிக்கப்படும்.

2-வது தவணை நிவாரணம்: கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக அரிசி அட்டைதாரர் களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நிவாரணத் தொகைகள் அளிக்கப் பட்டுள்ளன. விடுபட்ட நபர் களுக்கு இந்த வாரத்தில் வழங்க உணவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இதையடுத்து, கொரோனா நிவாரணத்தின் இரண்டாவது தவணையாக தலா ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் வரும் ஜூன் 3 ஆம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தவணைத் தொகையுடன் மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட் டத்தையும் தொடக்கி வைக் கிறார். இந்தத் திட்டத்தின் படி, கோதுமை, உப்பு, ரவை ஆகியன தலா ஒரு கிலோவும், சர்க்கரை, உளுத்தம் பருப்பு ஆகியன தலா அரை கிலோவும், புளி, துவரம் பருப்பு ஆகியன கால் கிலோவும் அளிக்கப்பட உள்ளன.கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியன தலா 100 கிராமும், குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப் ஆகியன தலா ஒன்றும் மளிகை தொகுப்புத் திட்டத் தில் இடம் பெறவுள்ளன. இந்தத் திட்டமும் ஜூன் 3-ஆம் தேதியன்று தொடங் கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. மலிவு விலையில் இதனை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகின்றன.