tamilnadu

img

100% அந்நிய முதலீடு - இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு அறிவிப்பை கண்டித்து இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2025-26-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டின் அளவை 74 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடாக உயர்த்துவதாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவித்தார். இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதற்கு நாடு முழுவதும் காப்பீட்டு ஊழியர்கள், முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து சென்னை எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி 1-இன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.