புதுதில்லி,பிப்.04- ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.என்.ரவிக்கு அறிவுரை கூறி வழக்கை நாளை ஒத்திவைத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு இயற்றும் சட்ட கோப்புகளுக்கு அனுமதியளிக்காமல் கிடப்பில் போட்டு வைப்பது, பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர்களை நியமிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர் மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மாநில அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்ததோடு ஆளுநர் முடிவெடுக்காமல் மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
24 மணி நேரத்தில் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவு எடுக்கிறார் என்பதை நாளை தெரிவிக்க ஒன்றிய அரசு தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்