சென்னை, மார்ச் 23- மதுரவாயிலில் 10 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்ற வாளிக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று தமிழக அரசை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. இது தொடரபாக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, செயலாளர்.ம.சித்ரகலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: மதுரவாயல் எம்.எம்.டி.ஏ 4வது பிளாக், 10வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் ராஜஸ்தானை சேர்ந்த சீனிவாசன் - சித்ரா தம்பதியினர் தனது 10 வயது மகள் கீதாவு டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வந்தனர். அதே குடியிருப்பின் 2வது மாடி யில் வசிக்கும் சுரேஷ் (வயது29) என்ற கட்டிட தொழிலாளி தங்கி உள்ளார். கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 21) இரவு சிறுநீர் கழிக்க வீட்டின் முன் இருக்கும் கழிவறைக்கு வந்த குழந்தையை தனது வீட்டிற்கு சுரேஷ் தூக்கி சென்றுள்ளான். குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, மொட்டை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசி கொலை செய்துள்ளான். நிர்பயா குற்ற வாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அதே நாளில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்ற வாளி சுரேஷ் மீது 376ஏபி, ஐபிசி 302, போஸ்கோ சட்டம் 5, 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். போக்சோ நீதி மன்றத்தில் வழக்கை துரித மாக நடத்தி 3 மாதத்திற்குள் தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.