சென்னை, ஏப்.24- காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன. ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது பயன்படுத்தும் லத்தி, விசில்கள் பழையதாகி விட்டன. இதையடுத்து புதிதாக லத்திகள், விசில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் லத்திகள், 26 ஆயிரம் விசில்கள் வாங்கப்படுகின்றன. ஒரு லத்தி ரூ.165 விலையில் வாங்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் செலவில் 10 ஆயிரத்து 326 லத்திகள் வாங்கப்படுகிறது. இதேபோல் ரூ.13 லட்சம் செலவில் 26 ஆயிரத்து 196 விசில் கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய லத்திகள், விசில்கள் அனைத்தும் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு காவலர்களுக்கு வழங்கப்படுகிறது.