செங்கல்பட்டு,நவ.26- அரசாணை எண் 318-ன் படி நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 34 ன் படி பல தலைமுறைக ளாக கோயில் இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் நியாயமான விலை யைத் தீர்மானித்து பயனாளிகளிடம் இருந்து கிரயத் தொகையைத் தவணை முறையில் பெற்றுக் கொண்டு அந்த இடங்களை சொந்தமாக வழங்கிட வேண்டும், அரசாங்கத்தால் வழங்க ப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்திட வேண்டும், அரசாணை எண் 318ன் படி நீண்ட காலமாக வீடு கட்டி குடியிரு க்கும் அனைவருக்கும் பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் துவக்கிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், செங்கை பகுதிச் செயலாளர் கே.வேலன், மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் இருந்து பேரணியாக சென்று, வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகுதிச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் லிங்கநாதன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அழகேசன், வட்டக்குழு உறுப்பினர் திருஞானம், முகமது கனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் இ.சங்கர் பேசினார்.
திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வட்டச் செய லாளர் குமார் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, விதொச நிர்வாகி கோதண்டம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். பின்னர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
மதுராந்தகம்
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன், வட்டச் செயலாளர் கே.வாசுதேவன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்ணராஜ், மாசிலாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.