tamilnadu

பொது வழியை திறக்கக் கோரி போராடிய 156 பேர் மீது வழக்கு

கல்பாக்கம்,டிச.18- செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலை யத்தில் பணிபுரியும் அதிகாரி கள், பணியாளர்கள் கல்பாக்கம் மற்றும் சது ரங்கப்பட்டினத்தில் உள்ள நகரியப்பகுதியில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், நக ரியத்தின் பிரதான நுழைவு வாயில்களாக கருதப்படும் புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் பகுதி வாயில்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டு காலை 5 மணிக்கு திறக்கப்படும் என்றும், அவசர காலங்களில் வாயில் பகுதியில் உள்ள சிஐஎஸ்எப் வீரர்கள் நுழைவு வாயில்களை திறந்து மூடு வர் என அணுசக்தி துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பொதுப்பணி த்துறை சுற்றறிக்கை வெளி யிட்டது. இதனை கண்டித்து கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அணுமின் நிலைய நிர்வாகத்தினர், வரு வாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில்  பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில்,  சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டதாக அணுமின் நிலைய நிர்வாக முதன்மை அலுவலர் வினயலதா, கல்பாக்கம்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்த புகாரின் அடிப்படையில்  பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது, அரசு அதி காரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது என 9 பிரிவுகளின் கீழ் போராட்ட த்தில் ஈடுபட்ட 156 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள னர். இவர்களை காவல்துறை யினர் கைது செய்யப் போவ தாகவும் கூறப்படுகிறது.