செங்கல்பட்டு:
நிதிப் பற்றாக்குறையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உற்பத்தி தொழிற்சாலையை ஆய்வு செய்த பின் னர் மத்திய சுகாதாரத் துறை அமைச் சர் ஹர்ஷவர்த்தனன் தெரிவித்துள் ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக் கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு மூலம் எச்பிஎல் நிறுவனம் மூலம் மிகப் பெரிய உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய் யப்பட்டது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு “தேசிய முக்கியத்துவ திட்டம்” என்று ஒப்புதல் அளித்தது. நாட்டின் தடுப்பூசி தேவையில் 75 விழுக்காடு எச்பிஎல் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் வாங்கப்படும். மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் என ஒப்பந்தம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து 100 ஏக்கர் பரப்பளவில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதில், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி. ரேபிஸ் தடுப்பூசி, கொரோனா தடுப் பூசி உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் உள் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது.இப்பணிகளில் பயோ டெக்னாலாஜி பயின்ற வல்லுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவு ரூ.594 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத் தைச் செயல்படுத்துவதில் காலதாமதமானதால், 2017 ஆம் ஆண்டில் ரூ.710 கோடியாகவும், 2019ம் ஆண்டில் ரூ.904.33 கோடியாக அதிகரித்தது. மீண்டும் திருத்தப்பட்ட ரூ.904.33 கோடியாகத் திட்டச் செலவு விரிவாக்க அறிக் கையை 2018 ஆம் ஆண்டு சமர்ப்பித் தது. ஆனால், நிதி அமைச்சகம் திட்டத் தின் முன்மொழிவு சாத்தியமில்லை எனக்கூறி நிதி ஒதுக்க நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தடுப்பூசி ஆய்வு மையம் மற்றும் தொழிற்சாலையை ஆய்வு செய்தார். பின்னர் பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தார்.
அப்போது, முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இத்தொழிற்சாலையை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.இந்த நிலையில், வெள்ளியன்று (ஜன.8) சென்னை வந்திருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செங்கற்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் அமைந்துள்ள தடுப் பூசி தொழிற்சாலை மற்றும் ஆய்வகத்தை ஆய்வு செய்தார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், மாநிலங்களவை சிபிஎம் முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் நிதி பற்றாக் குறையால் செயல்படாமல் உள்ளது. இத்திட்டம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்து தடுப்பூசி உற்பத்தி மையத்தை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், “கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்பிரச்சனை குறித்து நாடாளுமன் றத் தில் பேசினேன். இந்த மாதிரியான ஆய்வுக் கூடம் சீனா, பிரான்சில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக நமது நாட்டில் இங்குதான் உள்ளது. எனவே, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்” என்றார்.இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக 200 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. பிரதமரை சந்தித்தபின் இதை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர் காலத்தில் இந்த ஆய்வு மையம் கண்டிப்பாக திறக்கப்படும். இங்கு உற்பத்தி துவங்கினால் இந்தியாவிற்கு மட்டுமல்ல கிழக்கு ஆசியாவிற்கே தடுப்பு மருந்துகளை வழங்க முடியும் எனவும் அவர் கூறினார்.இச்சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், எஸ்.கண்ணன், வா.பிரமிளா, சிஐடியு மாவட்டச் செயலாளர் பகத்சிங்தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.