tamilnadu

img

தயவு செய்து எங்களின் கிராமப் பெயரை மாற்றுங்கள்

ராய்ப்பூர்: இம்முறை யார் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் சரி, எங்களின் ஊர்ப் பெயரை மாற்றுவதைத்தான் முதல் கோரிக்கையாக வைப்போம் என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் கூறியிருக்கின்றனர்.அந்த கிராமத்தின் பெயர் ‘ரபேல்’ (சுயகயடந) ஆகும். மகாசமுந்த் தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள்தான் தங்கள் கிராமத்தின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.காரணம், ரபேல் போர் விமானத்தின் பெயரும், அவர்கள் கிராமத்தின் பெயரும் ஒன்றாக இருப்பதுதான். ரபேல் விமானக் கொள்முதலில் ரூ. 58 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தங்களின் ஊர்ப்பெயர் மிகப்பெரிய ஊழலோடு இணைத்து பேசப்படுவது, தங்களுக்கு அவமானமாக இருப்பதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.ரபேல் ஊழலுக்கும், தங்கள் கிராமத்தின் பெயருக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும், அடிக்கடி வெளியாகும் செய்திகளை வைத்து, அக்கம் பக்கத்து கிராமங்களில் வசிப்பவர்கள், தங்கள் கிராமத்தை கேலி செய்தவதாக கூறுகின்றனர். இதனால், தங்கள் கிராமத்திற்கு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளைத்தான் ஆட்சியாளர்கள் செய்து தரவில்லை; தற்போது எங்களின் பெயர் மாற்றக் கோரிக்கையை மட்டுமாவது நிறைவேற்றுங்கள் என்று மாநில முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.