tamilnadu

கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள் மோடி- சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி

ராய்ப்பூர், ஏப். 2 - நேரத்திற்கு ஏற்ப பேசும், பிரதமர் மோடியின் உண்மையான முகம்எது? என்று காங்கிரஸ் தலைவரும், சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, பிரதமர்மோடிக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் பாகேல் எழுதியுள்ளார். அதில்“பிரதமர் மோடி, உங்களை மோடிஎன்று அழைக்கலாமா...?” என்று கேட்டுள்ள பாகேல், “ஏனென்றால், நீங்கள் அவ்வப்போது டீக்கடைக் காரர், தலைமை சேவகன், காவலாளி என பல்வேறு பெயர்களில்உங்களை அழைத்துக்கொள்வதால் மக்கள் குழப்பம் அடைகின்றனர்” என்றும் கிண்டல் அடித்துள்ளார்.“மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக பல்வேறு முகங்களைகாட்டிய முதல் இந்திய பிரதமர் நீங்கள் தான். உங்களின் உண்மையான முகம் உங்களுக்காவது நினைவில் உள்ளதா?” என இறங்கி அடித்துள்ள பாகேல், “இதற்காகவே, உங்களுக்கு ஒரு கண்ணாடியை பரிசாக அனுப்பி உள்ளேன்; அதை உங்கள் வீட்டில்மாட்டி வையுங்கள்; அதை எப்போதெல்லாம் கடந்து செல்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்கள் முகத்தை பாருங்கள்; உங்களின் உண்மையான முகத்தை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்”என்றும் விளாசித் தள்ளியுள்ளார்.