tamilnadu

img

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் 8பேர் பலி; 16 பேர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணிகளுடன் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.


சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்திலுள்ள அமேரா கிராமத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகினர். மேலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் அம்பிகாபூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மீட்பு பணிக்குச் சென்ற காவல்துறையினர் உறுதி செய்தனர்.


மேலும், வேன் ஓட்டுநர் மது அருந்தி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சுர்குஜா தெரிவித்தார்.