tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

புதுதில்லி, மார்ச் 14- கலால் வரியை அதிகரித்ததன் மூலம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை 3 ரூபாய் உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நில வரத்தை காரணம் காட்டி  இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மீது அடுத்த சுமையாக மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தும் அளவிற்கு மத்திய அரசு கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.