புனே:
மகாராஷ்டிர மாநிலம் புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்- ஜெர்மனியைச் சேர்ந்த மிகப் பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனம் போக்ஸ்வேகன் (Volkswagen). ஆண்டுக்கு 1 லட்சம் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இதற்காக இந்தியாவில் கோடிக் கணக்கில் தொடர்ந்து முதலீடும் செய்து வருகிறது.
தற்போது மேலும் ரூ. 8 ஆயிரம் கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், ஆட்டோமொபைல் உற்பத்திக் குத் தேவையான பெரும்பாலான உதிரிப்பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் மீது விதிக் கப்படும் தடை இந்தியாவில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.“இறக்குமதித் தடை போன்ற நடவடிக்கைகள் எங்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன. நாம் மிகச் சிறந்த ஏற்றுமதியாளராக வேண்டும் என்று நினைத்தால் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி தேவைப்படுகிறது. அவ்வாறு கிடைத்தால்தான் ஏற்றுமதியில்போட்டித்தன்மை இருக்கும். ஆட்டோமொபைல் துறைக்கு பிரத்தியேகமான கொள்கைகள் நீண்ட கால டிப்படையில் இருக்க வேண்டும். அவை அடிக்கடிமாற்றப்படும் வகையில் இருக்கக் கூடாது”என்று போக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநரான குருபிரதாப் போபாராய் பகிரங்கமாகவே கருத்துதெரிவித்துள்ளார்.போக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு புனே, அவுரங்காபாத் ஆகிய இடங்களில் இரண்டு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஆடிஉள்ளிட்ட பிராண்டு கார்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.