tamilnadu

img

பிபிசிஎல் தனியார் மயமாக்கல் குறித்து மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைத்தால், இந்த நிறுவனத்தின் தரம் குறையும் என்று மூடிஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

மத்திய அரசு தொடர்ந்து அதன் பங்குகளை விற்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இவ்வாறு அரசு தனக்கு சொந்தமான பங்குகளை விற்று தனியார்மயமாக்கலுடன் முன்னேறினால, அது நிறுவனங்களின் தரத்தை குறையும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அரசுக்கு சொந்தமான பிபிசிஎல் நிறுவனம் பிபிபி (BBB) என்ற தரக்குறியீட்டை பெற்றுள்ளது. இதுவே தனியாருக்கு விற்றால், பிஏ1 தரத்துக்கு குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே போல, அரசுக்கு சொந்தமான ஹெச்.பி.சி.எல் பங்குகளை அரசு ஓஎன்.ஜிசிக்கு விற்றது. ஆனால் தற்போது வரை அந்த நிறுவனம் பிபிபி தரக்குறியீட்டையே இதுவரை பெற்று வருகிறார் என்றும் அறிவித்துள்ளது. மூடிஸ் நிறுவனம், அரசு பங்கு விற்பனையை அறிவித்துள்ள நிலையில், இவ்வாறு பங்குகளை விற்று கடனை அகற்றி கடன் பத்திரத்தை மீட்பது, எதிர்மறை கடன் என்றும் மூடிஸ் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30 அன்று பிபிசிஎல் நிறுவனத்தில் அரசாங்கத்தின் 53.29 சதவிகித பங்குகளை விற்க, அதன் முதலீட்டாளர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இது அடுத்தாண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனத்திற்கான அதன் ஆதரவு மதிப்பீடு முக்கிய பங்கினை வகிக்கும் நிலையில், அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலில் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முக்கிய பங்கினை பிபிசிஎல் வகித்து வருகிறது என்றும் மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது. 

இது மொத்த நிறுவப்பட்ட சுத்திகரிப்பு திறனில் 15 சதவிகிதம் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் கடந்த மார்ச் நிலவரப்படி, நாட்டில் நுகரப்படும் மொத்த பெட்ரோலிய பொருட்களில் 21 சதவிகிதம் பங்கு வகிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசாங்கம் தனது முழு பங்குகளையும் ஒரு அரசு சாராத நிறுவனத்திற்கு விற்றால், நாங்கள் இனி பிபிசிஎல் மதிப்பீட்டில் அரசாங்கத்தின் ஆதரவை சேர்க்க மாட்டோம், இதன் விளைவாக நாங்கள் எந்த மாற்றங்களும் இல்லை என கருதி Ba1 என்று தரக்குறியீட்டை குறைப்போம் என்றும் எச்சரித்துள்ளது. எனினும் பிபிசிஎல் நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்கள் குழுவையும் அரசாங்கம் தொடர்ந்து நியமித்து அதன் செயல்பாடுகளில் கணிசமான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் வகையில், அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றொரு நிறுவனத்திற்கு இந்த பங்குகள் விற்கப்பட்டால், பிபிசிஎல் மதிப்பீடுகளில் நாங்கள் தொடர்ந்து ஆதரவைச் சேர்ப்போம் என்றும் மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.