அமைச்சர் தகவல்
புதுதில்லி,டிச.31- ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனி யார்மயமாக்கப்படும் என்று விமான போக்கு வரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள் ளார். ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமையுள்ள பொதுத்துறை நிறுவனமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவன மான ஏர் இந்தியா ,நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிறுவனத்தை மீட்க நட வடிக்கை எடுக்காமல் மத்திய பாஜக அரசு, ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பனை செய்து கடனை அடைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறுகையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு நாங்கள் அடி மையாகவோ, பலியாகவோ விரும்ப வில்லை. ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார்மயமாக்கப்படும். விமான கட்டணங்களை நெறிப்படுத்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.