டெல்டா மாவட்ட பாசனத்துக் காக மேட்டூர் அணையை முதல்வர் கடந்த மாதம் 12ம் தேதி திறந்து வைத்தார்.8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது,டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. காவிரியை நம்பி கடைமடை வரையில்விவசாயிகள் சாகுபடியை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் மே மாதத்தில் இருந்து காவிரியில் கர்நாடகா நமக்குதரவேண்டிய தண்ணீரை தராமல் நிறுத்தி வைத்திருக்கிறது. உரிய நேரத்தில் கேட்டு பெறாவி டடால் அதிகபட்சம் 45 நாளில் மேட்டூர்அணையை மூடும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை செய்தார். அது நடந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
மேட்டூர் அணையில் அதன் மொத்தகொள்ளளவில் தண்ணீர் இருப்பு,40.81 சதவீதமாக குறைந்துவிட்டது. அதாவது அணையின் கொள்ளளவில் பாதிக்கும் குறைவான அளவே தண்ணீர் இருக்கிறது. இந்த பின்னணியில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டது.இது தீவிர சாகுபடியில் ஈடுபட்டுள்ளவிவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கையகப்படுத்த இருப்பதால் நகை கடன் நிறுத்தபட்டிருக்கலாம் என்ற செய்தி கூட்டுறவு வங்கிகளின் அதி காரிகள் மத்தியில் உலா வருகின்றன. முதற்கட்டமாக நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் முழு அதிகாரத்தையும் ரிசர்வ் வங்கி எடுப்பது தொடர்பாக மத்திய மோடி அரசின் அமைச்சரவை கடந்த மாதமே முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் நகைக் கடன்வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதைகண்டித்து கூட்டுறவு வங்கிகளுக்கு முன்னால் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் கண்டன இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்கள் வழங்குவது நிறுத்தப்படவில்லை.இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வங்கிகளில் கூடுதல் நகைக் கடன் வழங்கும் போது,வைப்புத்தொகைதாரர்கள், வைப்புத்தொகையைத் திரும்பக் கேட்கும்பட்சத்தில்,அவர்களுக்கு வைப்புத்தொகையை திருப்பி தர வேண்டும் என்ற நோக் கில் வங்கி கடன்களை வழங்குவது குறித்து சில ஆலோசனைகளை தான்வழங்கியுள்ளோம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும் கூட்டுறவு வங்கிகளில் சென்று கேட்டால் அப்படி ஒன்றும் எங்களுக்கு தகவல் இல்லை மறு உத்தரவுவரும் வரை நகைக் கடன் கொடுக்கக்
கூடாது என்று ரகசிய ஆணை பிறப் பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.எனவே நகைக் கடன் வழங்குவதை நிறுத்தியதும் அவ்வாறு நிறுத்தப்படவில்லை என்று முதலமைச்சர் தெரிவிப்பதும் முன்னுக்குபின் முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அரசு உளறாமல் விரைவில் உண்மையை தெரிவிப்பது நல்லது.