tamilnadu

மூளைக் காய்ச்சல்: 14 சிறுவர்கள் பலி

பாட்னா, ஜூன் 9- பீகாரில் என்செபா லிட்டிஸ் என்ற மூளைகாய்ச் சல் நோயால் பாதிக்கப்பட்டு 14 சிறுவர்கள் உயிரிழந்தனர். முசாபர்பூர் பகுதியில், காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக சிறுவர்கள் மருத்துவமனைகளில் தொட ர்ந்து அனுமதிக்கப்பட்டு வரு கின்றனர். அவர்களை பரி சோதித்த மருத்துவர்கள், என்செபாலிட்டிஸ் என்ற மூளைகாய்ச்சல் நோய் பாதித்துள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 சிறு வர்களில், கடந்த ஒரு வார காலத்தில், 14 பேர் உயிரிழந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 சிறுவர்களின் இரத் தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்துள்ளதாகவும் மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.