tamilnadu

img

கேரளத்தில் பச்சை மண்டலங்களாக 3 மாவட்டங்கள்

திருவனந்தபுரம், மே 3- கேரளத்தில் கோவிட் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 96 ஆக குறைந்துள்ளது. நோயாளிகள் இல்லாத ஆலப்புழா, திரிச்சூர், எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறி விக்கப்பட்டுள்ளன. 

கோவிட் 19 குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் பினராயி விஜயன் செய்தி யாளர்களிடம் மேலும் கூறியதாவது:

கேரளத்தில் சனியன்று வயநாட்டிலும் கண்ணூரிலும் தலா ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. கண்ணூரில் ஆறு, இடுக்கியில் இரண்டு என எட்டு பேர் குணமடைந்தனர். கடந்த ஒரு மாதமாக கோவிட் நோய் கண்டறியப்படாத வயநாடு மாவட்டத்தில் தற்போது ஒரு நோயாளி உள்ள தால் பச்சையிலிருந்து ஆரஞ்சுக்கு மாறி யுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 96 பேர் சிகிச்சையில் உள்ளனர். 21,894 பேர் கண் காணிப்பில் உள்ளனர். 21,494 பேர் வீடுகளி லும் 410 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். வெள்ளியன்று 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 31,183 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 30,358 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. முன்னு ரிமை பட்டியலில் இருந்த 2093 மாதிரிகளில் 1234 தொற்று இல்லை என உறுதியானது. 

மாநிலத்தில் தற்போது 80 ஹாட் ஸ்பாட்டு கள் உள்ளன. புதிய ஹாட் ஸ்பாட்டுகள் இல்லை. கண்ணூரில் 23, இடுக்கி, கோட்டயம் தலா 11 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன. மிக அதி கமாக கண்ணூர் மாவட்டத்தில் 38 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் இருவர் காசர்கோடைச் சேர்ந்தவர்கள். கோட்டயத்தில் 18 பேரும், கொல்லம், இடுக்கி மாவட்டங்களில் தலா 12 பேரும் சிகிச்சையில் உள்ளனர். 21 நாட்களாக புதிய நோயாளிகள் இல்லாத ஆலப்புழா, திரிச்சூர், எர்ணாகுளம் மாவட்டங்கள் பச்சை மண்ட லங்களாக மாறுகின்றன. தற்போது கோவிட் நோயாளிகள் இல்லாத மாவட்டங்களாகவும் இவை உள்ளன. கண்ணூரும் கோட்டயமும் சிகப்பு மண்டலங்களாக தொடரும். அவ் வப்போது மாவட்டங்களின் நிலவரத்தை ஒட்டி மண்டலங்களின் தரம் மாறும். சிவப்பு மண்டல மாவட்டங்களில் ஹாட் ஸ்பாட்டு களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக தொடரும். மற்ற பகுதிகளில் தளர்வு இருக்கும். ஹாட் ஸ்பாட்டுகளான நகராட்சி களில் வார்டு அல்லது டிவிசன் முழுமையாக மூடப்பட்டன. இது பஞ்சாயத்துகளிலும் கடைப்பிடிக்கப்படும். பொதுப் போக்கு வரத்து பச்சை மண்டலங்களிலும் அனுமதிக் கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.