புவனேஸ்வர்:
கொரோனா தொற்று நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில்தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை (Census) நடத்துவது ஆபத்தானது எனஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எச்சரித்துள்ளார்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடிதம் ஒன்றை பட்நாயக் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் அதிகாரிகள் அனைவரும் அது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில்மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register - NPR), மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) உள்ளிட்டவை தொடர்பான பணிகளைஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும்சூழலில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள், களப்பணியாளர்களுக்கும், மக்களுக்கும் சுகாதார அளவில் பெரும்அச்சுறுத்தலாக அமையும். கணக்கெடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் காரணமாக நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று நவீன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது எடுக்கப்படவுள்ள கணக்கெடுப்பில் புதிதாகப் பல கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பெற்றோர் பிறந்த தேதி, பிறந்த ஊர்உள்ளிட்ட கேள்விகள் இடம்பிடித் துள்ளன. இந்த முறையில் கணக்கெடுப்பை நடத்த முடியாது என கேரளாமாநிலம் அறிவித்துள்ள நிலையில் தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களும் இந்த முறைகணக்கெடுப்பைக் கிடப்பில் போட்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.