tamilnadu

img

பின்னடைவு நிரந்தரமல்ல

இந்தியாவில் ஜனநாயக உரிமை மீட்கப்பட்டு, உழைப்பாளி மக்க ளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள் ளது. தலித் மக்களுக்கு ஓரளவுக்கு உரிமை தரப்பட்டுள்ளது. இவை ஆட்சி யாளர்கள் போட்ட பிச்சையால் அல்ல. கம்யூனிச இயக்கத்தின் தியாகத்தால் கிடைத்தவை. மொழிவழி மாநிலங்க ளுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தது கம்யூனிச இயக்கம். போராடி மொழி வழி மாநிலங்கள் அமைத்தது கம்யூனிஸ்ட் இயக்கம். தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட நாடாளுமன்றத்தில் முதலில் மசோ தா கொண்டு வந்தவர் பி.ராமமூர்த்தி.  உழைப்பாளி மக்களின் உரிமை களுக்காக, நிலப்பிரபுக்களின் கோட்டை களை எதிர்த்து, தெலுங்கானாவில் வீரச் சமர்புரிந்தோம். தேபாக எழுச்சி ஏற்படுத்தி குத்தகை விவசாயிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஜமீன்தாரி முறையை ஒழித்தோம். கிராமப்புறங்க ளில் அடித்தட்டு மக்களுக்கு குத்தகை உரிமையை, நிலவுரிமையை பெற்றுத் தந்தது செங்கொடி இயக்கம். பெண்ண டிமைச் சமுதாயம் ஒழிய மகத்தான சாதனை புரிந்தோம்.

புரட்சிகரமான சாதனை

கடந்த 100 ஆண்டுகளில் கம்யூனிச இயக்கம் படைத்துள்ள வரலாறு புரட்சி கரமானது. நெருப்பாற்றை நீந்தி புரட்சி கரமான வரலாற்றை செங்கொடி இயக்கம் படைத்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர்; சொந்த வாழ்க்கை, சுகபோகங்களை அர்ப் பணித்துள்ளனர். வெள்ளை ஏகாதி பத்திய ஆட்சியிலும், அதற்கு பின்வந்த  சுதந்திர இந்தியாவின் ஆட்சியிலும் சிறைகளில் அடித்து நொறுக்கப்பட்டவர் கள் ஏராளமானோர். இதையெல்லாம் மீறித்தான் ்செங்கொடி இயக்கம் சாதனை படைத்து வருகிறது.

நேருக்கு நேர் மோதல் 

இடதுசாரி, கம்யூனிச இயக்கத்திற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அது நிரந்தரமானது அல்ல. அது இடையில் ஏற்பட்டுள்ள சரிவு. இறுதி வெற்றி நமதே. மத்தியஅரசின் கொள்கை நாட்டை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. மதச்சார்பின்மையை காலில் போட்டு மிதிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு எதி ராக பேச முடியாமல் பல எதிர்க்கட்சி கள் வாய்மூடிக் கிடக்கும் நேரத்தில் நேர டியாக சவால் விடுக்கும் இயக்கமாக கம்யூனிச இயக்கம் உள்ளது. இந்திய அரசியலில் வலதுசாரி, இடதுசாரி எனும் இருபெரும் தத்துவம் நேருக்கு நேராக மோதுகிற சூழல் உருவாகி இருக்கி றது.
 

உந்துசக்தி

தற்போதுள்ள நெருக்கடிகளை முத லாளித்துவத்தால் தீர்க்க முடியாது. முதலாளித்துவத்திற்குள் இருக்கிற நெருக்கடிகளே அதனை அழித்துக் கொண்டிருக்கிறது. உழைப்பாளி மக்க ளின் உரிமைகளை, பாட்டாளி வர்க்கப் படையின் போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்ல, சாதிய, சமூக ஒடுக்கு முறையை எதிர்த்த புரட்சிகரமான பய ணத்தை மேற்கொள்ள நூற்றாண்டு விழா உத்வேகமளிக்கும். உந்து சக்தி யாக இருக்கும். புரட்சிகரமான பாதையை முன்னெடுப்போம் என சபதமேற்போம்.

ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “சுதந்திர போராட்ட காலத்திலும், அதற்கு பிறகும் எண்ணற்ற தோழர்கள் செங்கொடி ஏந்தி உயிர்த்தியாகம் செய்துள்ளனர். கேரளாவில் புன்னப்புரா வயலார், ஆந்திராவில் தெலுங்கானா, வங்கத்தில் தேபாக, தமிழகத்தில் வெண்மணி என்று எத்தனையோ உயிர் தியாக்கத்தை கம்யூனிச இயக்கத்தால் பட்டியலிட முடியும். விடுதலைப் போராட்ட காலத்தில் பொருளாதார, சமூக விடுதலை வேண்டும் என்று கம்யூ னிஸ்ட்டுகள் முழங்கினர். அதன் தேவை இன்றும் உள்ளது. அதற்காக போராடிக்கொண்டே இருக்கிறது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு தொடக்கத்தை ஒட்டி சென்னையில் சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசியது...