திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்திற்கான ஏற்றுமதி சதவீதத்தை 7 சதவீதத்திலிருந்து, 4 சதவீதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.
இது குறித்து பின்னலாடை நிறுவன உற்பத்தியாளர்கள் கூறியதாவது,திருப்பூர் மாநகரில் பின்னலாடை உற்பத்தியானது ஆண்டு தோறும் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் மத்திய மோடி அரசு கொண்டு வந்த ஜி.ஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்றவற்றால் பின்னலாடை உற்பத்தி பெரும் பாதிப்பை சந்தித்தது.இதனால் திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டது.பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையையும் இழந்துள்ளனர்.இதன் காரணமாக பின்னலாடை ஏற்றுமதியானது கடந்த ஒரு வருடகாலமாக குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அரசு உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி,ஏற்றுமதிக்காக வழங்கப்பட்ட தொகையிலிருந்து 4 சதவீதத்தை நிறுத்தியுள்ளது.இதனால் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக நிறுவன உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.