அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, பிப். 13- மத்தியஅரசின் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உரிய எதிர்நடவடிக்கைகள் மேற் கொள்ள, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட லில் அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி தலைமையில் வியாழ னன்று (பிப். 13) நடைபெற்றது. கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. (திமுக), உ.பலராமன் (காங்கிரஸ்), ப.சுந்தர்ராஜன் (சிபிஎம்), ந.பெரியசாமி, மு.வீர பாண்டியன் (சிபிஐ), மல்லை சத்யா, ஆ.வந்தியத்தேவன் (மதி முக), பேராசிரியர் சுப.வீர பாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), கே.ஏ. என்முஹமது அபூபக்கர் எம்எல்ஏ (இந்திய யூனியன் முசுலீம் லீக்), பேராசிரியர் எம்.எச்.ஜவா ஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), கு.ஜம்புலிங்கம், சத்தி யன் வேணுகோபால் (தமிழக வாழ்வுரிமை கட்சி), பேராயர் எஸ்றா சற்குணம் (இந்திய சமூக நீதி இயக்கம்), பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (கல்வியாளர்), கலி.பூங்குன்றன் (திக), ஐ.பி.கனகசுந்தரம் (இந்திய தேசிய மக்கள் மன்றம்) உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகளும், அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து கி.வீர மணி செய்தியாளர்களிடம் கூறு கையில், “பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சமூக நீதிக்கு எதிரான, மாநில உரிமை களை பறிக்கும் நடவடிக்கை கள் அதிகரித்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அடிப்படையில் சமூக நீதிக்கான சட்டங்கள் திருத்தப்படுகின்றன. நேரடி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு ஆணை இருக்கிறது. ஆனால் பாஜக அரசு மத்திய அர சின் இணை செயலாளர்கள் பதவிக்கு இட ஒதுக்கீடு தேவை யில்லை என ஆணை பிறப்பித்து, அதனடிப்படையில் தனியார் நிறுவனங்களில் இருந்து நிய மனமும் செய்துள்ளனர்” என்றார்.
தேசிய மருத்துவ ஆணை யத்தை உருவாக்கி, மாநில மருத்துவத் துறையை முற்றிலு மாக நீக்கி கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிராக பாஜக செயல் படுகிறது. நீட், நெக்ஸ்ட் தேர்வு மூலம் ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப் பில் சேர முடியாத நிலையை ஏற் படுத்தி விட்டது மத்திய அரசு. புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் ஒத்திசைவு பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு செல்லும் நட வடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். சமூக நீதியை பாதுகாப்ப தில் தமிழகம் எப்போதும் முன் னோடி மாநிலமாக இருந்து வருகிறது. அதனடிப்படியில், இம்மாத இறுதிக்குள் சென்னை யில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும், ஆர்ப்பாட்ட மும் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் மக்களவை கூட்டத் தொடரின் போது அனைத்துக் கட்சித் தலைவர்கள், மக்க ளவை உறுப்பினர்கள் பங்கேற் கும் சமூக நீதி பாதுகாப்பு கருத் தரங்கம் தில்லியில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்ட தாக வீரமணி தெரிவித்தார்.