சேலம், அக்13- மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கை களை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சேலத்தில் ஞாயிறன்று பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் மோச மான பொருளாதார கொள்கை யால் இந்தியா முன் எப்போதும் இல்லாத பொருளாதார நெருக் கடியில் சிக்கியுள்ளது. நாடு முழு வதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் வேலையின்மை அதி கரித்துக் கொண்டே உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பொருளாதார நெருக்கடியால் சீரழிந்து வருகிறது. விவசாய நெருக்கடியால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களும் வாழ் விழந்து தவித்துக் கொண்டிருக் கின்றனர். ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
மத்திய அரசின் இந்த மோச மான பொருளாதாரக் கொள்கை களைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சி சார்பில் அக். 10 முதல் 16ஆம் தேதி வரை கண்டன இயக்கங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி சேலம் அரியாகண்டம்பட்டி, சர்க்கரை புளியமரம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சூர மங்கலம் மண்டல செயலாளர் எம்.ராஜமாணிக்கம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப் பினர் டி.ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பி.பரமசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மாநகர செயலாளர் எம்.கனக ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொரு ளாளர் எம்.ராமன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இரா.ரமேஷ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜே.கனியன் பூங் குன்றன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண் டனர்.
பனமரத்துப்பட்டி
இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள மல்லூர் வீர பாண்டி கூட்டுரோட்டில் இடது சாரி கட்சிகள் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.தனக்கோடி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே. சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எ.மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.முருகேசன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.