நாகப்பட்டினம், ஜன.13- நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை சத்யா அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், திங்கட்கிழமை நடை பெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் கலந்து கொண்டு, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்குப் பொங்கல், இனிப்பு மற்றும் கரும்புகளை வழங்கினார். இதே போல் அன்னை சத்யா அரசு முதியோர் இல்ல முதியோர்களுக்கு ஆட்சியர் பொங்கல் பொருள்களை வழங்கினார். மாவட்ட வருவாய் அலு வலர் மு.இந்துமதி, மாவட்டச் சமூக நல அலுவலர் உமையாள், மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் நாளன்று ஏற்பட்ட சுனாமிப் பேரலை யில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து ஆதரவற்ற குழந்தை களுக்காக அரசு சார்பில் அன்னை சத்யா அரசுக் குழந்தைகள் காப்பகம் தோற்று விக்கப்பட்டது.