மார்ச் 17 இல் மக்கள் ஒற்றுமை மேடை போராட்டம்
சென்னை,மார்ச் 12- குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கும் அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை கண்டனம் தெரிவித்துள்ளது.மார்ச் 17 அன்று சென்னை மற்றும் மாவட் டத் தலைநகரங்களில் தொடர் இருப்புப் போராட்டம் நடை பெறுகிறது. இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரி யர் அருணன், க. உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடிஅரசு கொண்டுவந்துள்ள சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சியை எதிர்த்து தமிழகத்தில் கடந்து மூன்று மாதங்களாக அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பாக இரண்டு கோடிப் பேருக்கும் மேலானவர்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மோடிஅரசு கொண்டுவந்துள்ள சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சியை எதிர்த்து தமிழகத்தில் கடந்து மூன்று மாதங்களாக அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் பல வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பாக இரண்டு கோடிப் பேருக்கும் மேலானவர்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் சார்பாக மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. பல ஊர்களில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் பங்கேற்றுள்ள ஷாகின்பாக்குகள் பல நாட்களாக விடாது நடைபெற்று வருகின்றன. மாநில சுயாட்சிக்கு துரோகம் இழைக்கிற, பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத, மோடி அரசின் அநியாயங்களுக்கு அடங்கிப் போகும் அதிமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கி றது. சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சிக்கு எதிராக சென்னை யிலும் மாவட்ட மற்றும் தாலுகா தலை நகர்களிலும் மார்ச் 17 காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை நடைபெறவிருக்கும் 24 மணிநேர தொடர் இருப்பு போராட்டத்தில் மக்கள் பெருந் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.