tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களில் பொது விடுமுறை

சென்னை,டிச.25- உள்ளாட்சித் தேர்தல்  நடைபெறும் 27 மாவட்டங்க ளில் வரும் 27 மற்றும் 30 ஆம்  தேதி பொதுவிடுமுறை விடப்  படுவதாக தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக  உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் 27 மாவட்டங் களில் வரும் 27 மற்றும் 30 ஆம்  தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் அந்த மாவட்டங்களில் பொது விடுமுறை விட வேண்டும் என தமிழக அர சுக்கு, மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் எல்.  சுப்பிரமணியன் கடிதம் எழுதி யிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 27 மாவட்டங்  களில் வரும் 27 மற்றும் 30  ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை விடப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், அர சின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவ னங்கள் மூடப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.