tamilnadu

img

பழங்குடி மக்களுக்கும் நலிவுற்றோர் திட்டத்தில் கடன்

மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை வெற்றி 

சென்னை, ஜூன் 19- ஊரடங்கு உத்தரவால் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்கான நலிவுற்றோர் கடன் வழங்கும் திட்டத்தில் பழங்குடி மக்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான பி. டில்லிபாபு முதல மைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதி னார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதித்துள்ள மக்க ளுக்காக கோவிட்-19 துணை  திட்டத்தின்கீழ் நலிவுற்றோ ருக்கான தனிநபர் வழங்கும் திட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய்  சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்  திறனாளி மற்றும் நலிவுற்றோ ருக்கான பட்டியலை தமிழக அரசு  அறிவித்துள்ளது.

வறிய நிலையில் வாடும் தமிழகத்தின் இருளர், காட்டு நாயக்கன், பனியர் போன்ற பழங்குடி மக்களும் ஊரடங்கு அறிவித்த காலத்திலிருந்து வாழ்வும் வருமானத்தை இழந்தும் பரிதவித்து வருகின்ற னர். அவர்களும் இந்த திட்டத்தில்  பயன்பெற வசதியாக தனிநபர் கடன் வழங்கும் அரசின் நிபந்த னைகளை தளர்த்தி பழங்குடி மக்க ளுக்கும் சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செய லாளருக்கும் அனுப்பி இருக்கி றார்.

இந்த கடிதத்தை பரி சீலித்த துறை அதிகாரிகள், அர சின் அறிவிப்பு படி 30 மாவட்டங்க ளில் வசிக்கும் நலிவுற்ற மக்களு டன் பழங்குடி மக்களுக்கும் அந்த  கடனை வழங்குவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் திட்ட அதிகாரி களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பழங்குடி மக்களையும் கடன் பட்டியலில் சேர்த்து உள்ளதால் விண்ணப்பம் செய்யும் அனைத்து பழங்குடி மக்களுக்கும் ரூபாய் 20,000 கடன்  வழங்கப்படும் என்று  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபுவிடம்  தமிழ்நாடு கிராமப்புற திட்ட முதன்மை செயலாளர் கார்த்திகா  தெரிவித்துள்ளார்.