பொங்குபாளையம் ஊராட்சியில் விடுபட்ட குளம், குட்டைகளை
திருப்பூர், ஜூலை 14 – அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடு பட்ட திருப்பூர் வடக்கு ஒன்றிய குளம், குட்டை களை இப்போதைய முதல் கட்டத் திட்டப் பணிகளில் சேர்க்க முடியாது, எனினும் இரண்டாவது கட்டத் திட்டத்தில் இணைப்பது பற்றி ஆய்வு செய்வதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் குளம், குட்டைகள் அமைந் துள்ளன. ஏற்கனவே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்திய போது திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தற்போது தமிழக அரசு நிறைவேற்றி வரும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பொங்கு பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குளம், குட்டைகள் மட்டுமின்றி வடக்கு ஒன்றியத் தில் ஏராளமான குளம், குட்டைகள் சேர்க்கப் படாமல் விடுபட்டுள்ளன. எனவே இந்த குளம், குட்டைகளை அத்திக்கடவு அவிநாசி திட்டத் தில் சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள், பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய நிர்வாகி கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பொங்குபாளையம் ஊராட்சிக்குட் பட்ட குளம், குட்டைகள், 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கணக்கெடுத்து அத்திக் கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பொதுப் பணித் துறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அவிநாசி பொதுப்பணித் துறை சிறப்புத் திட்டக் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.அன் பழகன் விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியத் தலைவர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியுள் ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது, அத்திக் கடவு அவிநாசி திட்டத்தில் மொத்தம் 1045 குளம், குட்டைகள் வரையறை செய்யப் பட்டு திட்டப் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் , பொங்கு பாளையம் பகுதி குளம், குட்டைகளை முதல் கட்ட திட்டத்தில் சேர்க்க சாத்தியம் இல்லை. எனினும் இந்த குளங்களை இரண்டாம் கட்ட திட்டத்தில் இணைப்பதற்கு உரிய முன்னுரிமை தரப்படும். மேலும் ஆய்வு செய் வதற்கு ஏதுவாக, இக்கோரிக்கை மனு ஈரோட்டில் உள்ள பொதுப்பணித் துறை திட் டம் மற்றும் திட்ட வடிவமைப்புக் கோட்டத் துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக செயற் பொறியாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.