சேலம்,ஜூலை 21- சேலம் வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் இயக்கத்தை, தாரமங்கலத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாரமங்கலம் புறவழிச்சாலையை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும் கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால் - நரிமேடு சாலை, தொளசம்பட்டி சாலையில் இரு மேம்பாலங்களையும் திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் பேசுகையில், திருச்செங்கோடு தொடங்கி சங்ககிரி - கொங்கணாபுரம் - தாரமங்கலம் வழியாக ஓமலூர் செல்லும் சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். ஓமலூர் தொடங்கி மேச்சேரி வரையிலும், பவானி - மேட்டூர், மேட்டூர் - தொப்பூர் இடையேயான சாலைகளும் விரிவுபடுத்தப்படும். ஓமலூர் தொடங்கி மேட்டூர் வரை 4 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் என்று கூறினார்.