tamilnadu

img

ஜன.8 பொது வேலைநிறுத்தம்: கேவிபி ஊழியர்கள் பங்கேற்பு

36வது அகில இந்திய மாநாட்டில் முடிவு

சென்னை, டிச. 28- மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில் ஜன.8 அன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் கரூர் வைஷ்யா வங்கி  ஊழியர்களும் பங்கேற்கின்ற னர். கரூர் வைஷ்யா வங்கி ஊழியர் சங்கத்தின் 36வது அகில இந்திய மாநாடு  சனிக்  கிழமையன்று (டிச.28) சென் னையில் தொடங்கியது. மாநாட்டின் துவக்க நிகழ் வுக்கு சங்கத்தின் தலைவர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். 

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்  செயலாளர் சி.எச். வெங்க டாச்சலம் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசுகை யில், “மத்திய அரசு பொரு ளாதார வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடு இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் பிரதம ரின் பொருளாதார ஆலோச கராக இருந்த அரவிந்த் சுப்பிர மணியம் 2.5 விழுக்காடு அளவே இருப்பதாகக் கூறு கிறார். இந்தியப் பொருளாதா ரம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் தாக்கம் வங்கித்துறையைப் பெரு மளவு பாதிக்கும்” என்றார். “விவசாயிகள் வருமா னத்தை இரட்டிப்பாக்குவ தாகக் கூறிய மத்திய அரசு  கடந்த 6 வருடத்தில் அதற் கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேளாண்  துறையும் கடும் நெருக்கடி யில் உள்ளது. உற்பத்தித் துறையும் வீழ்ந்துள்ளது. பொருளாதார சரிவை நிலைப்படுத்தத் தெரியாமல், பொதுத்துறைகளை தனி யார்மயமாக்குகின்றனர். தனியாருக்கு ஆதரவாக  வங்கிகளை நட்டமடைய செய்கின்றனர். சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்குலைக்  கின்றனர். இவற்றிற்கெல் லாம் எதிர்ப்பு தெரிவித்து ஜன.8 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தில் முழு மையாகப் பங்கேற்போம்” என்றும் அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் விலை வாசி உயர்வு, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், வங்கித்துறையில் மேற்  கொள்ளப்படும் தேவையற்ற  சீர்திருத்தங்கள் ஆகியவற்  றிற்கு எதிர்ப்பு தெரிவித்து  தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கரூர் வைஷ்யா வங்கி யின் தலைவர் ஜெ. நடராஜன்,  தமிழ்நாடு வங்கி ஊழியர்  சம்மேளனத்தின் பொதுச்  செயலாளர் இ. அருணாச்ச லம், பெடரல் வங்கி ஊழி யர் சங்க பொதுச் செயலா ளர் மாத்யூ ஜார்ஜ், கரூர்  வைஷ்யா வங்கி அதிகாரி கள் சங்கத்தின் பொதுச்செய லாளர் எம். நரசிம்மன், ஓய்வு  பெற்றோர் சங்க பொதுச்  செயலாளர் ஜெ. ராஜேந்தி ரன், ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஐ.  வெங்கடேசன், வரவேற்புக் குழுத் தலைவர் எஸ்.டி. சீனி வாசன், செயலாளர் ஏ. சீனிவா சன் உள்ளிட்டோர் பேசினர்.