tamilnadu

img

மதுபான கடைகளை திறக்க கடும் எதிர்ப்பு

சென்னை, மே 5- மதுபான கடைகளை திறக்கும்  முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியு றுத்தி உள்ளன. 40 நாட்களுக்கும் மேலாக அரசு மதுபான கடைகள் மூடப்  பட்டதால், பலர் குடியின் பிடியி லிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பாக இருந்தது. இந்த சம யத்தைப் பயன்படுத்தி தமிழ் நாட்டில் நிரந்தர மது விலக்கை கொண்டுவர வேண்டும் என அரசி யல் கட்சி தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் தமிழ்நாடு அரசு மது பானக் கடைகளை மே 7ஆம் தேதி  முதல் திறக்கப்படும் என்ற அறி வித்தது. காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை நிபந்தனை களோடு செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,” மது பானக் கடைகளை திறப்பதற்கு  ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டி ருக்கும் வருவாய் இழப்பை சரி செய்ய, மக்கள் மீது பழிபோடு வது நியாயமல்ல! ஊரடங்கு  காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவ தற்கான சூழலை உருவாக்குவது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும் அக்கறையும்  உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்  பட்ட அபாயகரமான நடவ டிக்கையை மேற்கொள்ளாது” என்று கூறியுள்ளார்.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி பரிபூரண மது விலக்கை நிறைவேற்றுவது என்  பது ‘அம்மா அரசின் கொள்கை’ என்று அறிவித்து வரும் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மதுபான வியாபாரத்தை மட்டுமே அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் கருதுவது வெட்கக் கேடானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பெருந் தொற்று பரவல் தீவிரமாகி வரும் சூழலில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு  உடனடியாக திரும்பப் பெற்றுக்  கொண்டு பூரண மதுவிலக்கை  அமல்படுத்த நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்றும்  முத்தரசன் வலியுறுத்தியிருக்கி றார். மே 7 முதல், மதுக்கடைக ளைத் திறக்க,தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்,  ஏழை எளிய மக்களின் அடி வயிற்றில் அடிப்பதாகும். எனவே,  அந்த முடிவைக் கைவிட வேண்டும்  என்று மதிமுக பொதுச்  செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார்.