tamilnadu

img

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

7 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

வெம்பக்கோட்டை, மார்ச் 20- விருதுநகர் மாவட்டம், வெம்பக்  கோட்டை அருகே உள்ள சிப்பிப்பாறை யில் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7  தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பல தொழி லாளர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  வெம்பக்கோட்டை அருகே உள்ளது சிப்பிப்பாறை. விருதுநகர் மாவட்டத்தின் கடைசி எல்லையாக இந்த ஊர் உள்ளது. இங்கு வெள்ளை யாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை  உள்ளது. 

இந்த ஆலையில்  ஐந்துக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலு வலரின் உரிமம் பெற்று ஆலை இயங்கி வருகிறது.    இங்கு வெள்ளிக்கிழமை  30-க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந் தனர். பேன்சி ரக பட்டாசு தயார்  செய்யும் போது பட்டாக மருந்து களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் பட்டாசு ஆலையில் உள்ள அறைகள் அனை த்தும் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த விபத்தில் தென்காசி மாவட்டம் மைப்பாறையைச் சேர்ந்த இராணி (42), ஜெயபாரதி (45), பத்ர காளி(33), வேலுத்தாய் (34), தாமரைச் செல்வி (32), தங்கம்மாள் (39), சங்கு பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் மகன்  முருகைய்யா (49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

சுப்பிரமணியன், பொன்னுத்தாய், சுப்பம்மாள்,  அய்யம்மாள், மாடசாமி, பேச்சியம்மாள், முருகலட்சுமி, ஜெயராம்  ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.   தகவலறிந்து கழுகுமலை, சிவ காசி, வெம்பக்கோட்டை ஆகிய பகுதி களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத் திற்கு வந்து தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை சாத்தூர்  கோட்டாட்சியர் காளிமுத்து. விருது நகர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் பெருமாள் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.  

சிஐடியு. மார்க்சிஸ்ட் கட்சி ஆறுதல்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் (சிஐ டியு)சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மகாலட்சுமி, மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர் செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.