tamilnadu

img

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டித்திடுக!

மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை

சென்னை, ஏப்.10- தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை அளித் துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நோய் பர வலை தடுக்க நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரு கிறது. ஆனாலும் வைரஸ் தொற்று அதி கரித்தே காணப்படுகிறது. தமிழகத்தில் இது வரை 7,267 பேருக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்துள்ளது. இவர் களில் 834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் இறந் துள்ளனர். 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

முதல்வர் ஆலோசனை

இந்நிலையில் சென்னை தலைமை செய லகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்துவது குறித்து வெள்ளியன்று காணொலிக்காட்சி மூலம் பல்வேறு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோ சனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசின் துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட மருத்துவ வல்லுநர் குழு, முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமியை வெள்ளி யன்று சந்தித்து ஆலோசனை நடத்தியது.  முதலமைச்சரை சந்தித்த பின்பு, மருத் துவ நிபுணர்கள் சார்பில் மருத்துவர் பிரதீபா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ கத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. அரசு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் கொரோனா தாக் கம் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது. இருந்தபோதிலும் நோய் பரவலை கட்டுப் படுத்த ஊரடங்கு நீட்டிப்பு தேவை. எனவே, ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.